தமிழ் திரு விருதுகள் 2019

தமிழ்! நம் எண்ணமாகவும் உணர்வாகவும் பேச்சாகவும் செயலாகவும் இருக்கும் தமிழ், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தொய்வில்லாமல் பேரொளி வீசிக்கொண்டிருக்கிறது. தமிழ் எனும் அணையாத தீபத்தைக் காலம்காலமாக ஏந்தியவர்கள், ஏந்திக்கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர்! உலக அரங்கிலும் நம் மனதிலும் தமிழ் பெருமரமாக உயர்ந்து, நம் எல்லோருக்கும் நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் போன்றோரின் தன்னலம் கருதாத உழைப்பே.

தொன்மைச் சிறப்பும் வளமும் கொண்ட இந்த மொழியையும் பண்பாட்டையும் காப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கும் இதன் பெருஞ்சிறப்பை உணர்த்த வேண்டியது நமது கடமையாகும். இந்த நோக்கத்தில் ‘இந்து தமிழ் திசை’ கடந்த 2017-ம் ஆண்டு செய்த முன்னெடுப்புதான் ‘தமிழ் திரு விருதுகள்’. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழுக்கும், அதன் பண்பாட்டுக்கும் பெருமை சேர்த்த ஆளுமைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே அடையாளம் கண்டு ‘யாதும் தமிழே’ விழாவின் ஒரு பகுதியாக ‘தமிழ் திரு’ விருதுகளை வழங்கி ‘இந்து தமிழ் திசை’ 2017-ல் கவுரவித்தது. கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் திரு. ஐராவதம் மகாதேவன், மூத்த எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன், வில்லிசைக் கலைஞர் திரு. சுப்பு ஆறுமுகம், கல்விச் செயல்பாட்டாளர் திரு. பிரபா கல்விமணி, இஸ்ரோ பெண் விஞ்ஞானி திருமதி வளர்மதி ஆகிய ஐவரும்தான் 2017-ம் ஆண்டில் ‘தமிழ் திரு’ விருதுகள் பெற்ற ஆளுமைகள். இந்தப் பெருநிகழ்வின் தொடர்ச்சியாக இந்த 2019-ம் ஆண்டும் ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. தமிழை வளப்படுத்திய, வளப்படுத்தும் மூன்று சாதனையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கி கவுரவிக்கவிருக்கிறோம். மூத்த எழுத்தாளர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ‘தமிழ் திரு’ விருதும், இரண்டு பேருக்குச் சமகாலச் சாதனையாளருக்கான ‘தமிழ் திரு’ விருதும் வழங்கப்படவிருக்கிறது.

தமிழின் செழுமைக்குப் பெரும் பங்களிப்பாற்றும் படைப்பாளிகளைச் சிறப்பிப்பதென்பது தமிழைச் சிறப்பிப்பதுதான். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழோடு சேர்ந்து தமிழின் பெருமைக்குரிய எழுத்தாளர்களைக் கொண்டாடுவோம் வாருங்கள்!

Thamizh Thiru Awards Nominations are closed

Powered By

RAMRAJ -- Powered by

Celebration Partners

lalitha
PSR
velammal

Associate Partner

ayyappa

Associate Partner

covaicare

Radio Partner

Radio

hospitality Partner

Residency